பொரளையில் 56 பேர் உள்ளிட்ட 273 பொலிஸாருக்கு கொரோனா

STF முகாம்கள் 3 இற்கு பூட்டு

பொரளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 56 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் களுத்துறை பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் பொரளை பொலிஸ் நிலையம் பொதுமக்கள் சேவைக்காக மூடப்பட்டுள்ளதாகவும் மக்கள் எவரும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக பொரளை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தர வேண்டாம் என்றும் பொலிசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மூன்று பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளன.

அதற்கிணங்க களனி, களுபோவில,மற்றும் ராஜகிரிய பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாம்களே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதுவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் 56 பேர் உட்பட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 273 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...