நானு ஓயா புகையிரத பொறியியல் அலுவலகம் தற்காலிக மூடல்

43 பேர் தனிமைப்படுத்தலில்

நானு ஓயா புகையிரத பொறியியல் அலுவலகம் இன்று (04) முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக, நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

கொவிட்-19  தொற்று ஏற்பட்டுள்ள ஒருவருடன் பொறியியலாளர் ஒருவர் தொடர்பை பேணியமையால்,  நானு ஓயா புகையிரத பொறியியல் அலுவலகம் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும்,  நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

நானு ஓயா புகையிரத அலுவலகப் பொறியியலாளரின் மனைவிக்கு கொவிட்-19  தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, நானு ஓயா புகையிரத பொறியியல் அலுவலகத்துடன் நேரடி தொடர்பை பேணிய ஊழியர்கள் உட்பட 43 பேரை தனிமைப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள இவர்களுக்கு PCR பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறித்த அதிகாரியின் மனைவிக்கு,  குருணாகலையில் வைத்தே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதுடன், குறித்த அதிகாரி   கடந்த மாதம் 25ஆம், 26ஆம் திகதிகளில்  வீடு சென்று  திரும்பியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

(தலவாக்கலை குறூப் நிருபர் - பி. கேதீஸ், ஹட்டன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிருஷாந்தன், சந்ரு)


Add new comment

Or log in with...