இராணுவத் தளபதி சவேந்திர சில்வா
ஊரடங்கு உத்தரவு தொடர்பில் போலியான செய்திகளை வெளியிட்டு மக்களை ஏமாற்ற வேண்டாமென சமூக ஊடகங்களுக்கு கொவிட்-19 யை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். ஊரடங்கு உத்தரவு தொடர்பாக சமூக ஊடகங்கள் மற்றும் சில வலைத்தளங்களில் பரப்பப்பட்ட போலி செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக சவேந்திர சில்வா மேலும் கூறியுள்ளதாவது, நாட்டை முழுமையாக முடக்குவதற்கு இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
மேலும் போலி செய்திகளை வெளியிட்டு, மக்களை ஏமாற்ற வேண்டாம். ஊரடங்கு உத்தரவு இல்லாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் முடிந்தவரை வீட்டில் இருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
Add new comment