தனிமைப்படுத்தப்பட்ட 15 பேர் இன்று வீட்டுக்கு

தனிமைப்படுத்தப்பட்ட 15 பேர் இன்று வீட்டுக்கு-15 Quarantined Persons Set to Leave for Homes NOCPCO

- நேற்று 11,889  PCR சோதனைகள்; இதுவரை 536,337 PCR பரிசோதனைகள்

முப்படையினரால்‌ நிர்வகிக்கப்படும்‌ தனிமைப்படுத்தல்‌ நிலையங்களிலிருந்து இன்று (03) 15 பேர் தமது‌ வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக‌, கொவிட்-19 பரவலைத் தடுப்பதற்கான செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, பின்வரும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து 15 பேரும் இன்று வீடு திரும்புகின்றனர்.

  • திக்வெல்ல ரிசோர்ட் 05 பேர்
  • ஜெற்விங் ப்ளூ ஹோட்டல் 03 பேர்
  • இராஜகிரிய ஆயுர்வேத வைத்தியசாலை 07 பேர்

அந்த வகையில், முப்படையினரால் நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து இன்று (03) வரை 62,917 நபர்கள் தங்களது தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவு செய்து, வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முப்படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 35 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1,082 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

அத்துடன், நேற்றையதினம் (02) மாத்திரம் 11,889 PCR சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதுவரை இலங்கையில் 536,337 PCR சோதனைகள் மேற்கொள்ளபட்டுள்ளதாக, கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை நேற்றையதினம் (02) குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வெளியேறிய 344 பேரில், இருவர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்பதோடு, ஏனைய 342 மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை கொத்தணியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...