களுத்துறை: மத்துகம பிரதேச செயலகத்தில் இரு கிராமங்கள் விடுவிப்பு

களுத்துறை: மத்துகம பிரதேச செயலகத்தில் இரு கிராமங்கள் விடுவிப்பு-2 Areas in Kalutara-Matugama PS-Released from Isolation-NOCCP

களுத்துறை மாவட்டத்தில் தற்போது வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்பட்டிருந்த 3 கிராமங்களில் இரு கிராமங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது.

களுத்துறை மாவட்டம், மத்துகம பிரதேச செயலகத்தின் ஓவிட்டிகல, பதுகம, பதுகம நவ ஜனபதய பிரதேசங்கள், கடந்த ஒக்டோபர் 18ஆம் திகதி முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து தற்போது பதுகம நவ ஜனபதய கிராமத்தைத் தவிர ஏனைய இரு கிராமங்களும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

தற்போது வரை, கம்பஹா, களுத்துறை, குருணாகல், கொழும்பு, மட்டக்களப்பு, நுவரெலியா, யாழ்ப்பாணம் ஆகிய 8 மாட்டங்களில், 9 பொலிஸ் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, 64 பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மேல் மாகணத்தில் இன்று நள்ளிரவு (30) முதல் திங்கள் அதிகாலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

PDF File: 

Add new comment

Or log in with...