Thursday, October 22, 2020 - 4:18pm
இன்று (22) பிற்பகல் 6.00 மணி முதல் கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
மறு அறிவித்தல் வரை குறித்த ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும் என, கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.
ஏற்கனவே, இன்று முற்பகல் முதல் கொழும்பின் 5 பொலிஸ் பிரிவுகளான மட்டக்குளி, முகத்துவாரம் (மோதறை), ப்ளூமெண்டல், கிராண்ட்பாஸ், வெல்லம்பிட்டி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment