வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

வெளிநாட்டு அமைச்சின் கொன்சியுலர் சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்-Foreign Ministry Consular Division Closed Until Further Notice

கொன்சியுலர் விவகாரங்கள் பிரிவினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு வெளிநாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்த்து, கொவிட்-19 வைரஸ் பரவாமல் தடுக்கும் முகமாக, இந்நடவடிக்கையை எடுத்துள்ளதாக அமைச்சு அறிவித்துள்ளது.

ஆதலால், கொழும்பிலுள்ள செலிங்கோ கட்டடத்தில் அமைந்துள்ள கொன்சுலர் விவகாரங்கள் பிரிவு 'ஏற்றுமதி ஆவணங்களை' சான்றுறுதிப்படுத்திக் கொள்வதற்காக பிரிவுக்கு வருகை தரும் ஏற்றுமதியாளர்கள் உட்பட வருகை தரும் அனைவருக்கும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள பிராந்திய கொன்சுலர் அலுவலகங்களால் மேற்கொள்ளப்படும் ஆவண சான்றளிப்பு சேவைகளும் மறு அறிவித்தல் வரை வழங்கப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் இறப்பு மற்றும் இறப்பு தொடர்பான ஆவண உதவிகள் சார்ந்த கோரிக்கைகளுக்காக பின்வரும் இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கங்கள்:
0776032252
0773586433
0718415623
0701428246
மின்னஞ்சல்: [email protected]
தொலைநகல்: 0112446091 / 0112333450


Add new comment

Or log in with...