ஓய்வூதிய திணைக்கள சேவைகள் தற்காலிக இடைநிறுத்தம்

- சேவைகளை பெற 1970 இனை அழைக்கவும்

நாட்டில் நிலவும் கொவிட்-19 நிலைமை காரணமாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஓய்வூதியர்கள் வருகை தருவதை தற்காலிகமாக இடைநிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஓய்வூதியத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஏ. ஜகத். டீ. டயஸ் இன்று (13) விடுத்துள்ள அறிவித்தலில் இவ்வாறு அறிவித்தார்.

ஓய்வூதியத்தை செயற்படுத்தும் நேர்முகப்பரீட்சைக்கு ஓய்வூதியர்களை அழைப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு ஓய்வூதியர்கள் வருகை தருவது இன்று (13) முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தி வைப்பதற்கு ஓய்வூதியத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

எனவே, ஓய்வூதியத் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளை பெற்றுக்கொள்ள வேண்டி ஏற்படும் பட்சத்தில், 1970 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

 

PDF File: 

Add new comment

Or log in with...