ராஜித மீண்டும் ஏப். 21 தாக்குதல் ஆணைக்குழு பொலிஸ் பிரிவில்

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த ஆணைக்குழுவின் அழைப்பிற்கு அமைய, வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று (11) காலை அவ்வாணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் முன்னிலையாகியிருந்தார்.


Add new comment

Or log in with...