தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு-Navithanveli Pradeshiya Sabha Chairman Thavarasa Kalaiarasan Appointed as ITAK-TNA-National List MP

- நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் தவராசா கலையரசனை நியமிக்க முடிவு
- திகாமடுல்லவில் இழந்த எம்.பி. பதவி தேசிய பட்டியல் மூலம் நிரப்பப்பட்டது
- த.தே.ம.மு தேசியப் பட்டியல் கஜேந்திரனுக்கு

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒரேயொரு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமான தவராசா கலையரசனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கிய தவராசா கலையரசனின் பெயரை சிபாரிசு செய்து, தேர்தல் ஆணைக்குழுவிற்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் கே. துரைராஜசிங்கம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் அம்பாறைக்கு-Navithanveli Pradeshiya Sabha Chairman Thavarasa Kalaiarasan Appointed as ITAK-TNA-National List MP

மட்டக்களப்பு நல்லையா வீதியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் காரிலயத்தில் இன்று (11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாள் சந்திப்பில் இவ்வறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு தேசிய பட்டியல் ஆசனம் ஒன்று கிடைத்துள்ளது. இதனை யாருக்கு வழங்குவது என பல்வேறு கருத்துப் பரிமாற்றப்பட்டது. இருந்தபோதும் தேர்தல் ஆரம்பிப்பதற்கு முன்னர் தேசியப் பட்டியல் தயாரிக்கும் போது சிலருக்கு கொடுக்கப்படவேண்டும் என்று இருந்தது.

இருந்தபோதும் இப்போது இருக்கின்ற நிலமையிலே ஏற்கனவே ஏற்படுத்திக் கொண்ட உடன்பாடுகளுக்கு அப்பால் சென்று செயற்பட வேண்டியதன் அவசியம் இருக்கின்றது.  ஆகவே இதில் சம்மந்தப்ப ட்டவர்களை அழைத்து இந்த விடயங்களை தெரிவித்தோம் அதனை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கமைய நேற்று (08) சனிக்கிழமை சம்பந்தன் ஜயா வீட்டில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது தலைவருக்கு சில அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு இதற்கமைய தேசிய பட்டியலை அம்பாறையிலுள்ள அந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்க வேண்டும் என்பதற்கமைய முடிவின் பிரகாரம்  இன்று ஞாயிற்றுக்கிழமை (11) காலை நான் அம்பாறை மாவட்ட த்தைச் சேர்ந்த முன்னாள் கிழக்கு மாகாண சபையைச் உறுப்பினரும் முன்னாள் நாவிதன்வெளி தவிசாளருமான தவராசா கலையரசன் பெயரை  பரிந்துரை செய்து  தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளேன். என அறிவித்தார்.

நடைபெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடைவைக் கண்டுள்ளது. அதேவேளை எமது கட்சி தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் ஆகிய நான் தோற்கடிக்கப்பட்டுள்ளேன். இதற்கான பலவிதமான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எது எப்படியிருந்தபோதும் எமது தலைவரின் சிறந்த தலைமைத்துவத்தை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

குறிப்பாக ஒரு உறுப்பினர் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்கு தயார் என தெரிவித்திருக்கும் அந்த கூற்றினை முற்றாக நிராகரிக்கின்றேன். எந்த விதத்திலும் இவ்வாறான அறிக்கைகள் விடுவது கட்சியின் கட்டுக்கோப்பிற்கும் விசுவாசத்திற்கும் எதிரானது.

கட்சியினுடைய தலைமையிலே எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது அந்தவகையில் நாங்கள் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருப்போம். இந்த தேர்தல் முடிவடைந்தவுடன் ஜனநாயக அடிப்படையில் எனக்கு ஏற்பட்ட இந்த தோல்வியை ஏற்றுக் கொண்டு தலைவர் சம்பந்தன் ஜயாவை சந்தித்து மக்கள் எனக்கு ஆணை வழங்கவில்லை என்ற அடிப்படையிலே பொதுச் செயலாளர் பதவியை நான் துறக்க அனுமதிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டேன்.

இதற்கு அவர், தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு தேர்தல் தொடர்பான கடமைகள் பொதுச் செயலாளருக்கு இருப்பதாகவும் இது தொடர்பாக எமது பொதுச் சபை தான் முடிவு எடுக்கவேண்டும் என்பதால் நீங்கள் பதவியை துறக்ககூடாது என கட்டளையிட்டதன் அடிப்படையில் நான் தொடர்ந்து இந்த பணியை செய்ய வேண்டியவனாக இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

(கல்லடி குறூப் நிருபர்  - உ. உதயகாந்த்)

த.தே.ம.மு தேசியப் பட்டியல் கஜேந்திரனுக்கு

இதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை, கட் சியின் செயலாளர், செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்குவதென முடிவாகியுள்ளது.

கட்சியின் மத்திய குழு நேற்று (08) நடத்திய ஆலோசனையின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...