திகாமடுல்ல: ஶ்ரீ.ல.பொ.பெ; மட்டக்களப்பு: த.தே.கூ; திருமலை: ஐ.ம.ச. கைப்பற்றின

அம்பாறை: ஶ்ரீ.ல.பொ.பெ; மட்டக்களப்பு: த.தே.கூ; திருமலை: ஐ.ம.ச. கைப்பற்றின-Parliamentary Election-2020-Eastern Province Digamadulla-SLPP-Batticaloa-ITAK-TNA-Trincomalee-SJB

- தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் திகாமடுல்ல ஆசனம் பறிபோனது

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளதோடு, மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டுள்ளதோடு, திருமலை மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் கைப்பற்றியுள்ளன.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126,012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102,274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43,319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், தேசிய காங்கிரஸ் 38,911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், கைப்பற்றியுள்ளது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, பொத்துவில், கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 05 இலட்சித்தி 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 402,344 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 385,997 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவானதோடு, 16,347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 79,460 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 67,692 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34,428 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 33,424 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டதோடு, ஐக்கிய மக்கள் சக்தி 28,362 வாக்குகளை பெற்ற போதிலும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 86,394 வாக்குகளைப் பெற்று 02 ஆசனத்தையும், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு 39,570  வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும், கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், சிறிலங்கா சமாஜவாதி கட்சி, ஜனவத பெரமுனை, அகில இலங்கை தமிழ் மகாசபை, சிறிலங்கா ஜீவகஜாதிக பெரமுன, ஈ.பி.டி.பி, ஜே.வி.பி, லிபரட் கட்சி, அபே ஜனபல, தேசிய ஜனநாயக முன்னனி உள்ளிட்ட கட்சிகள் இதில் போட்டியிட்டன.

(ஒலுவில் விசேட நிருபர் - எம்.எஸ்.எம். ஹனீபா)


Add new comment

Or log in with...