ரணில் உள்ளிட்ட ஐ.தே.க. வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி

ரணில் உள்ளிட்ட ஐ.தே.க. வேட்பாளர்கள் அனைவரும் தோல்வி-UNP Including Ranil Wickremsinghe Loose His MP Seats-SJB Secure 2nd Place-Parliamentary Election-2020

- கட்சிக்கு எந்தவொரு ஆசனமும் இல்லை
- 2 1/2% இற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது
- கட்சியிலிருந்து விரட்டப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி இரண்டாம் இடத்தில்

நடைபெற்று முடிந்துள்ள தேர்தலில் முன்னாள் பிரதமரும், ஐக்கிய தேசிய கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைத் தழுவியுள்ளனர்.

அத்துடன் அளிக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் பங்கிடப்படும் 196 ஆசனங்களில் ஐ.தே.க. விற்கு எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இத்தேர்தலில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 3 வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே ஐ.தே.க. பெற்றுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு மொத்தமான 249,435 வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளன. இது அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 2.15% வாக்குகளாகும்.

கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்குகளின் அடிப்படையில் வழங்கப்படும் போனஸ் அல்லது தேசிய பட்டியல் ஆசனமாக ஒரு ஆசனத்தை அக்கட்சி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் விக்ரமசிங்கவின் 42 வருட அரசியல் வரலாற்றில் முதன் முறையாக, அவர் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியுற்ற சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

ஆயினும் இம்முறை முதல் தடவையாக தேர்தலில் களமிறங்கிய, ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து பிரிந்து தனியாக களமிறங்கிய, சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு, இரண்டாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியானது, 2,771,984 (23.90%) வாக்குகளைப் பெற்று 54 ஆசனங்களை (47 + 7 போனஸ்) பெற்றுக் கொண்டுள்ளமை சிறப்பம்சமாகும்.


Add new comment

Or log in with...