ராஜிதவின் பிணை மேன்முறையீடு மனு வாபஸ்

முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை நிராகரிப்பு தொடர்பான மேன்முறையீட்டு மனு, இன்று (30) அவரினால் மீளப் பெறப்பட்டுள்ளது. 
 
இன்றையதினம் இம்மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது. 
 
தனது கட்சிக்காரர்  தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இம்மனுவை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை எனவும், ராஜித சேனாரத்ன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில்  தெரிவித்தார். 
 
குறித்த விடயம் தொடர்பான வழக்கில் பிணை இரத்துச் செய்யப்பட்ட ராஜித சேனாரத்ன கடந்த மே மாதம் 13ஆம் திகதி கைது செய்யப்பட்டு, ஜூன் 10ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதிவானினால், ரூபா 5 இலட்சம் கொண்ட இரு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Add new comment

Or log in with...