முகக்கசவம் அணியாத நபர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என, பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் நிலை அகலும் வரை, அதனை கட்டுப்படுத்தப்படுத்துவதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அத்தியாவசியம் எனவும் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரப் பிரிவின் பரிந்துரைகளை ஏற்று நடக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக பேணப்பட்டு வந்த சுகாதார நடைமுறைகள், சமூக இடைவெளி பேணுதல் உள்ளிட்ட சுகாதார பழக்கங்களை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயங்ளுக்கு முரணாக செயல்படும் அனைவருக்கும் எதிராக, தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய, வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Add new comment