கப்பல் ஆளணியினருடன் வந்த நெதர்லாந்து போயிங் விமானம்

கப்பல் ஆளணியினருடன் வந்த நெதர்லாந்து போயிங் விமானம்-230 Netharland Sailors Arrived in Sri Lanka

நெதர்லதந்துக்குச் சொந்தமான போயிங் ரக 767-300ER விமானத்தின் மூலம் ஐரோப்பிய கப்பல் ஆளணியினர் 230 பேர் நேற்று (03) மத்தள விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

காலி துறைமுகத்தில் தரித்து நிற்கும் கப்பல் ஒன்றின் ஆளணியினரே இவ்வாறு இலங்கைக்கு வந்தடைந்தனர்.

விசேட மனிதாபிமான நடவடிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் 230 பேரும் இலங்கைக்குள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

கப்பல் ஆளணியினருடன் வந்த நெதர்லாந்து போயிங் விமானம்-230 Netharland Sailors Arrived in Sri Lanka

இவர்கள் அனைவரும் விமான நிலைய வளாகத்தில் வைத்து இரசாயன அணு, உயிரியல், கதிரியக்க அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் தொற்று நீக்கல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் பஸ் வண்டிகள் மூலம் காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதேவேளை குறித்த கப்பலில் பணியாற்றி தங்களது பணிகளை முடித்த 53 பேர், குறித்த விமானத்தின் மூலம் நேற்று (03) இரவு விமான சேவை ஊழியர்களுடன், மீண்டும் நெதர்லாந்து சென்றுள்ளது.


Add new comment

Or log in with...