கொரோனா ஒழிப்பில் புலனாய்வு பிரிவு பெரும் பங்கு

கொரோனா ஒழிப்பில் புலனாய்வு பிரிவு பெரும் பங்கு-கொரோனா ஒழிப்பில் புலனாய்வு பிரிவு பெரும் பங்கு-State Intelligence On COVID19 Eradication

போதை அடிமைகள் உள்ளிட்ட கொரோனா பரவல் தொடர்பில் 31 பிரிவுகள் அடையாளம் காணப்பட்டது

கொரோனா ஒழிப்பில் புலனாப்வுப் பிரிவு செயற்பட்ட விதம் குறித்து, இன்றையதினம் ரூபவாஹினி தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியில், அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா விளக்கமளித்தார்.

கடந்த ஓரிரு தினங்களில் 400 கொவிட்-19 நோயாளர்கள் அடையாளங் காணப்பட்டிருந்த நிலையில் இந்த எண்ணிக்கை திடீரென 600 ஆக அதிகரித்தது. இதற்கான காரணத்தை விளக்குகையில், இந்த நோய் மார்ச் மாத காலப்பகுதியிலே இலங்கையில் வேகமாக பரவ ஆரம்பித்தது. இதற்கு முன்னதாக நாம் இந்த நோய் எவ்வாறு எத்துறைகள் மூலம் பரவ ஆரம்பித்தது என்பதை கொத்து அடிப்படையில் 31 பிரிவாக வகுத்து கொண்டோம்.

அதன் அடிப்படையில் சுற்றுலா பயணிகள், இரத்தினக்கல் வர்த்தகம், போதைப்பொருள், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், விசேடமாக இத்தாலி போன்ற நாடுகளில்ருந்து வந்தவர்கள், சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் போனற பிரிவுகளின் அடிப்படையில் நாம் எமது புலனாய்வு நடவடிக்கைகளை நாம் விரிவுபடுத்தினோம்.

இதற்கமைவாக விசேடமாக சுதுவெல்ல பகுதியில் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டிருந்தவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததை அடையாளங் கண்டோம். இவர்களுள் ஒருவர் கிராண்ட்பாஸ் பகுதியில் போதைப் பொருளை பெற்றுள்ளார். இதனை விற்பனை செய்தவருக்கு கொரோனா தொற்று இருக்கவில்லை ஆனால் போதைப்பொருளை வாங்கியவருக்கு கொரோனா தொற்று காணப்பட்டுள்ளது. இவர்கள் மூலம் போதைப் பொருள் விற்பனை செய்தவர் தொடர்பு கொண்டவர்கள் உள்ளிட்ட பல்வேறு மட்டத்தில் நாம் புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு தகவல்களை பெற்று சுகாதாரப் பிரிவினருக்கு வழங்கினோம் என்றும் அவர் தெரிவித்தார்.

சுதுவெல்ல பகுதியில் அடையாளங் காணப்பட்ட கொவிட்-19 நோயாளி தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் கடற்படையினர் அந்தப் பகுதியை முடக்குவதிலும் பாதுகாப்பு வேலியை அமைப்பதிலும் தீவிரமாக ஈடபட்டிருந்தனர். இதனாலேயே வெலிசறை கடற்படை வீரர்கள் இந்த நோய்த்தொற்றக்குள்ளார்கள்.

இவர்களில் சிலர் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்றிருந்தனர். இந்த கடற்படை முகாம் தனிமைப்படுத்தப்பட்டது. விடுமுறையில் சென்றிருந்த கடற்படை வீரர்கள் தொடர்புபட்டிருந்த குடும்ப உறுப்பினர்கள், நெருக்கமாக பழகியவர்கள், அயலவர்கள் உள்ளிட்டவர்கள் அடங்கலாக சுமார் 800 பேரை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதார நடவடிக்கைகளுக்குமாக சுகாதார அதிகாரிகள் ஒழுங்குகளை மேற்கொண்டனர். வெலிசறை முகாமில் 2,000 வீரர்கள் இருக்கின்றனர்.
விடுமுறையில் சென்றிருந்தவர்கள் 500 பேர். முகாமைச் சேர்ந்த வீரர்கள் தமது முன்னைய முகவரியில் அல்லாது வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். அதாவது திருமணத்திற்குப் பின்னர் இந்த இடமாற்றம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் அனைவரது தகவல்களும் திரட்டப்பட்டன. என்றும் அவர் விபரித்தார். தற்பொழுது 88 233 பேர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

குற்றச்செயல்கள் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றிலேயே புலனாய்வு பிரிவினர் பாரிய நடவடிக்கைகளில் மேற்கொள்கின்றனர். ஆயினும் கொவிட் 19 என்பது சுகாதார துறையுடன் சம்பந்தப்பட்ட நோய்த தொடர்பான விடயமாகும். இதில் இலங்கை புலனாய்வு பிரிவு தமது பணியை எவ்வாறு முன்னெடுக்கின்றது என்பது குறித்து அவர் இவ்வாறு விளக்கமளித்தார்.

30 வருட கால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது போன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலமைத்துவத்தின் எண்ணக்கருவிற்கு அமைவாக கொவிட் 19 வைரசை நாட்டில் முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கை உண்டு என்று அரச புலனாய்வு பிரிவின் உதவிப் பணிப்பாளர் பராக்கிரம சில்வா தெரிவித்தார்.

சுகாதாரத்துடன் தொடர்புபட்ட இந்த நோய் தொற்றை தடுப்பதில் புலனாய்வு பிரிவு மேற்கொண்டு வரும் நடவடிக்கையில் தனிப்பட்டவர்களின் பிரத்தியோக தகவல்களுக்கு எந்தவித குந்தகமும் ஏற்படாது. இதற்கான உறுதியை எம்மால் தெரிவிக்க முடியும். எமது பணி நோயை இல்லாதொழிப்பதற்கு சுகாதார பிரிவின் நோயை தடுப்பதற்கான முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகும் என்று அவர் தெரிவித்தார்.

தற்பொழுது இந்த வைரஸ் தொற்று நாட்டில் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள்ளோம். நாட்டிலிருந்து இதனை முழுமையாக இல்லாதொழிப்பதற்கான வலிமை சுகாதார பிரிவைப் போன்று பாதுகாப்பு தரப்பினருக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

உலகில் புலனாய்வுத் துறையில் முன்னணியில் விளங்கும் நாடுகளைப் போன்று இலங்கைப் புலனாய்வுப் பிரிவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதா என்ற கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

உலகில் இஸ்ரேல் போன்ற நாடுகள் புலனாய்வுத் துறையில் முன்னணியில் திகழ்கின்றன. இருப்பினும் இவ்வாறான நாடுகளின் புலனாய்வு விடயங்களை நாம் பின்பற்றவில்லை. எமது நாட்டுக்கென புலனாய்வு சேவையொன்று எம்மிடம் உண்டு. இதன் மூலமே எவராலும் முடிவுக்கு கொண்டு வரமுடியாத என்று தெரிவிக்கப்பட்ட 30 வருட கால யுத்தத்தை நாம் வெற்றிகரமாக நிறைவு செய்தோம். இதற்கு தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அப்போது தலமை தாங்கினார். அவரது எண்ணக்கருவிற்கு அமைவாக விடயங்களின் அடிப்படையிலே தற்பொழுது இந்த கொவிட் 19 தொற்றை இல்லாதொழிப்பதற்கு புலனாய்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.


Add new comment

Or log in with...