இலங்கை திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அழைப்பு

இலங்கை திரும்ப விரும்பும் மாணவர்களுக்கு அழைப்பு-Students From London-Australia Repatriated-SriLankan Airlines

இலங்கைக்கு திரும்ப நினைக்கும் மாணவர்களுக்கு ஶ்ரீ லங்கன் விமான சேவை அழைப்பு விடுத்துள்ளது.

தமது சொந்த நாட்டுக்கு திரும் விரும்புகின்ற இங்கிலாந்து அல்லது அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ளவர்களுக்கு இவ்வழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்கள், தங்களை அந்தந்த நாடுகளில் உள்ள இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தில் விரைவாக பதிவு செய்யுமாறு, ஶ்ரீ லங்கன் விமான சேவையினால் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட திகதிகளில் லண்டன் மற்றும் மெல்பேர்ன் நகரங்களிலிருந்து கொழும்புக்கு விசேட விமானத்தை இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ள ஶ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனம், வெளி விவகார அமைச்சின் அனுமதிக்கு அமைய, இதனை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.

 

 


Add new comment

Or log in with...