வீதிகளில் செல்வோர் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்

வீதிகளில் செல்வோர் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்-Compulsory to Wear Face Mask When Travelling in the Road

பாதுகாப்புப்படை வீரர்களின் பாதுகாப்பு கருதி முடிவு

இன்று (11) முதல் வீதிகளில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

ஊரடங்கு வேளையில் அனுமதியுடன் வீதியில் செல்பவர்கள் முதல் அனைவரும் மூக்கு, வாயை மூடும் வகையில் முகக் கசவம் அணிந்து செல்ல வேண்டும் எனவும், அவ்வாறு செல்லாதவர்களை, வீட்டிற்கு திருப்பி அனுப்புமாறு, அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மாஅதிபரினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில், பொலிஸார் மற்றும் முப்படைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, ஜாலிய சேனாரத்ன மேலும் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...