கொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு

கொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு-Dalada-Malwatte Asgiriya Chapters Donates-Rs 2C to-COVID19 Healthcare-Social Security Fund

கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி ஜனாதிபதி மல்வத்து - அஸ்கிரி மகாநாயக்க தேரர்களுக்கு விளக்கம்

கொவிட்-19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு, தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் இணைந்து ரூ. 2 கோடி அன்பளிப்பு செய்துள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) முற்பகல் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

தலதா மாளிகைக்கு சென்ற ஜனாதிபதியை தியவதன நிலமே நிலங்க தேல வரவேற்றார்.

கொவிட்19: தலதா மாளிகை, மல்வத்து - அஸ்கிரி விகாரைகள் ரூ. 2 கோடி அன்பளிப்பு-Dalada-Malwatte Asgiriya Chapters Donates-Rs 2C to-COVID19 Healthcare-Social Security Fund

கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு தியவதன நிலமே நிலங்க தேலவினால் ஒரு கோடி ரூபா ஜனாதிபதியிடம் வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினரை சந்தித்து கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

மகாநாயக்க தேரரும் அதற்கு ஆசிர்வாதம் வழங்கி அந்நிதியத்திற்கு 50 இலட்சம் ரூபா நிதியினை அன்பளிப்பு செய்தார். ஜனாதிபதி மல்வத்து அநுநாயக்க தேரர் சங்கைக்குரிய நியங்கொட விஜிதசிறி தேரரையும் சந்தித்தார்.

அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன நாயக்க தேரரை சந்தித்த ஜனாதிபதி அவர்கள், மகாநாயக்க தேரர் உள்ளிட்ட அஸ்கிரிய பீடத்தின் மகா சங்கத்தினருக்கும் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டம் பற்றி விளக்கினார்.

கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு அஸ்கிரி விகாரையினால் அன்பளிப்பு செய்யப்பட்ட 50 லட்சம் ரூபா மற்றும் மல்வத்து, அஸ்கிரி விகாரைகளிடமிருந்து கிடைத்த ஆசிர்வாதங்களுக்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.


Add new comment

Or log in with...