ஊரடங்கை மீறிய 2,262 பேர்; 579 வாகனங்கள் கைது

ஊரடங்கை மீறிய 2,262 பேர்; 579 வாகனங்கள் கைது-2262 Arrested So Far-Violating Curfew

ஊரடங்கு அமுலில் இருக்கின்ற வேளையில் அதனை மீறும் வகையில் நடந்து கொண்ட 2,262 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

நேற்று (23) இரவு 226 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 78 வாகனங்களை கைப்பற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (20) மாலை 6.00 மணிக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தியது முதல், தற்போது வரை, 2,262 பேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, 579 வாகனங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.


Add new comment

Or log in with...