ஊரடங்கு தளர்த்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டியவை

ஊரடங்கு தளர்த்தப்படும் போது கடைப்பிடிக்க வேண்டியவை-Keep Distance

ஊரடங்கு தளர்த்தப்படும் போது பொதுமக்களை கடைப்பிடிக்குமாறு அரசாங்கம் ஒரு சில விடயங்களை அறிவித்துள்ளது.

அவையாவன,

  1. தேவை ஏற்படுமாயின் மாத்திரம்‌ பொதுப் போக்குவரத்து சேவையை பயன்படுத்துதல்‌.
  2. முடியுமான எல்லா சந்தர்ப்பங்களிலும்‌ இரண்டு நபர்களுக்கு இடையில்‌ 1 மீற்றர்‌ இடைவெளி தூரத்தை பேணுதல்.
  3. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக உங்கள்‌ வீட்டிலிருந்து மிக அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு மாத்திரம்‌ செல்லுங்கள்.
  4. ஒரு வீட்டிலிருந்து ஒருவர்‌ மாத்திரம்‌ வர்த்தக நிலையத்திற்கு செல்லுங்கள்.
  5. வழங்கப்பட்டுள்ள வைத்திய ஆலோசனைகளை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
  6. வயோதிபர்களை வீட்டிலேயே தங்க வைக்கவும்‌.
  7. பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வர்த்தக நிலையங்களில்‌ செலவிடும்‌ நேரத்தில்‌ நபர்களுக்கு இடையில்‌ 1மீற்றர்‌ இடைவெளி தூரத்தை பேணுங்கள்‌.
  8. பொருட்களை கொள்வனவு செய்யும்‌ பொழுது வர்த்தக நிலையங்களில்‌ செலவிடும்‌ காலத்தை மட்டுப்படுதிக் கொள்ளுங்கள்.
  9. வர்த்தக நிலையங்களுக்குள் அதிகமானோர்‌ உட்பிரவேசிப்தை கட்டுப்படுத்துவதில்‌ வர்த்தக நிலைய உரிமையாளர், முகாமையாளர்‌, பாதுகாப்பு பிரிவினர்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌.
  10. வெளியிடங்களுக்கு சென்று மீண்டும்‌ வீட்டிற்கு வரும்‌ பொழுது வழங்கப்பட்ட சுகாதார ஆலோசனைகள்‌ கடைபிடித்த பின்னரே வீடுகளுக்குள்‌ பிரவேசியுங்கள்.

Add new comment

Or log in with...