பயணிகள் விமானங்கள், கப்பல்கள் நாட்டுக்குள் நுழையத் தடை

பயணிகள் விமானங்கள், கப்பல்கள் நாட்டுக்கு நுழையத் தடை-Passenger Flights and Ships Banned Until COVID19 Controlled

- இயல்பு நிலை திரும்பும் வரை முடிவில் மாற்றமில்லை
- நாட்டிலிருந்து வெளிச் செல்லும் விமான சேவைகள் தொடர்ந்தும் இடம்பெறும்

கொரோனா வைரஸ் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பரவும் அபாயத்தை தடுக்கும் வகையில் அனைத்து பயணிகள் விமானங்கள் மற்றும் பயணிகள் கப்பல்கள் நாட்டுக்குள் வருவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனை அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதன் காரணமாக நாட்டினுள் ஏற்பட்டுள்ள நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பும் வரை எக்காரணம் கொண்டும் இத்தீர்மானத்தில் நெகிழ்வுத்தன்மைக்கு இடமில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நாட்டிலிருந்து வெளியேறும் விமான சேவை நடவடிக்கைகள் தொடர்ந்தும் எவ்வித இடையூறுகளுமின்றி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...