சுற்றுலா பயணிகளுக்கு 24 மணி நேர அவசர தொலைபேசி 1912

சுற்றுலா பயணிகளுக்கு அவசர தொலைபேசி 1912-24 Hr Hotline for-Touris in Sri Lanka-SLTDA

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு உதவுவதற்காக, 1912 எனும் விசேட அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் இத்தோலைபேசி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு, வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இத்தோலைபேசி இலக்கம் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அது தவிர COVID-19 நோய் தொடர்பில் தொடர்பு கொள்ள பொலிஸ் தலைமையகத்தை, பின்வரும் தொலைபேசிகள் மூலம் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
011 244 4480
011 244 4481
011 597 8730
011 597 8734
011 597 8720

பொதுவான சுற்றுலா தொடர்பான விபரங்களுக்கு
011 242 6900

இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கான அவசர தொலைபேசி
1912

சுற்றுலா பயணிகளுக்கு அவசர தொலைபேசி 1912-24 Hr Hotline for-Touris in Sri Lanka-SLTDA


Add new comment

Or log in with...