Thursday, March 19, 2020 - 2:20pm
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் இம்மாதம் 23ஆம் திகதி (திங்கட்கிழமை) சம்பளத்தை வழங்குமாறு நிதி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகளுக்கு இன்று (19) வரை விடுமுறை வழங்கப்பட்டிருந்ததோடு, நாளை (20) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை அரசாங்க மற்றும் தனியார் பிரிவுகளுக்கு வீடுகளிலிருந்து கடமைகளில் ஈடுபடுமாறு அரசாங்கம் இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இது தொடர்பான நடைமுறை பின்னர் அறிவிக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
Add new comment