ஒரு வருடத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றமில்லை

ஒரு வருடத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றம் செய்வதில்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது விலைச்சூத்திரம் அமுலில் இல்லை எனத் தெரிவித்த அவர்,  சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் அல்லது, குறைத்தாலும் ஒரு வருடத்திற்கு எரிபொருள் விலையில் மாற்றத்தை மேற்கொள்வதில்லை என்று அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் மற்றும் செலவுகளை ஈடுசெய்ய தேர்தல் ஆணைக்குழுவுக்கு 08 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...