ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம்

ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம்-Rishad Bathiudeen's Wife at CID-Mahara Buddha Statue

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை தொடர்பில் ரிஷாட் கண்டனம்

கொழும்பு இசிபதான மாவத்தையில் உள்ள வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காணி உறுதிப்பத்திரங்கள் குறித்து வாக்குமூலம் வழங்க, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவி இன்று இரண்டாவது நாளாகக சிஐடியில் முன்னிலையாகியியுள்ளார்.

இன்று முற்பகல் 10.30 மணியளவில் அவர் அங்கு முன்னிலையாகியிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் நேற்றையதினம் (26) அவரிடம் சுமார் ஐந்து மணி நேரம் வாக்குமூலம் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, கொழும்பு இசிபதானவிலுள்ள வீட்டில் பல்வேறு காணி உறுதிகள் கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் ஒரு சில காணி உறுதிப்பத்திரங்கள் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் பெயரில் இருந்தாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக சிஐடியினர் நீதிமன்றிற்கு அறிவித்திருந்தனர்.

​​அதற்கமைய, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் மனைவியிடமிருந்து வாக்குமூலம் பெறுமாறு நீதிமன்றம் சிஐடிக்கு உத்தரவிட்டிருந்தது.

மஹர சிறைச்சாலை புத்தர்சிலை விவகாரம்

ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம்-Rishad Bathiudeen's Wife at CID-Mahara Buddha Statueமஹர சிறைச்சாலையில் 100 வருடம் பழைமை வாய்ந்த பள்ளிவாசலுக்குள் புத்தர் சிலையை நிறுவி, அதனை ஓய்வு அறையாக மாற்றி, முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை காயப்படுத்திய இழிசெயலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் எம்.பி தெரிவித்துள்ளார்.

இந்த தீய செயலுக்குப் பின்னால் உள்ள சக்திகளுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமரை கேட்டுள்ள அவர், இந்தச் செயலானது அரசியலமைப்பில் மதங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளையும், அடிப்படை உரிமைகளையும் நிராகரிக்கின்றதெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனநாயக நாட்டில் இறைமை மற்றும் உரிமைகளை மீறுகின்ற  இச்செயலானது கேலிக்குரியது எனவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெறாமல் தடுப்பது, அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் மனைவி CIDயில் வாக்குமூலம்-Rishad Bathiudeen's Wife at CID-Mahara Buddha Statue

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் ட்விற்றர் பக்கத்திலும் இந்தக் கண்டனம் பதிவேற்றப்பட்டுள்ளது.

(படம்: கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்)


Add new comment

Or log in with...