பட்டதாரிகளுக்கான வயதெல்லை 45ஆக அதிகரிப்பு

பட்டதாரிகளுக்கான வயதெல்லை 45ஆக அதிகரிப்பு-Unemployment Graduate Job Age Limit Increased by 45

விண்ணப்பம் பக்கத்தின் அடியில்

- பெப்ரவரி 20ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
- 2019.12.31ஆம் திகதியன்று 45 வயதிற்கு குறைவானவராக இருத்தல் வேண்டும்.

- ஒரு வருடத்திற்கு அதிக காலம் தொழில் ஒன்றில் ஈடுபடாதவராகவும் இருத்தல் வேண்டும்.
- ஒரு வருட பயிற்சி காலப்பகுதியில் ரூ. 20,000 கொடுப்பனவு.
- குறித்த மாவட்டத்தில் 5 வருடங்கள் பணி புரிய வேண்டும்

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் விண்ணப்பிப்பதற்கான வயதெல்லை 35 இலிருந்து 45ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கேற்ப வேலையற்ற பட்டதாரிகள்  மற்றும் டிப்ளோமாதாரிகளுக்கான தொழில்வாய்ப்பு விண்ணப்பம் கோரல் கடந்த வியாழக்கிழமை (06) அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, தொழில்வாய்ப்பிற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளின் எண்ணிக்கை 35 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் அதனைப் பார்கிலும் அதிக வயதையுடைய பட்டதாரிகள் மற்றும் மக்கள் அமைப்புகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற்கொண்டு இவ்வயதெல்லையை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

பட்டம் அல்லது டிப்ளோமா
தொழிலை எதிர்பார்த்துள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள முதலாவது பட்டப்படிப்பொன்றை அல்லது அதற்கு சமமான தகைமையாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள டிப்ளோமா பாடநெறி ஒன்றினை 2019.12.31ஆம் திகதி பூரணப்படுத்தியிருக்க வேண்டும்.

1 வருடமாக தொழிலற்றவர்; வயதெல்லை 45
விண்ணப்பதாரி 2019.12.31ஆம் திகதி 45 வயதிற்கு மேற்படாதவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பிக்கின்ற பிரதேச செயலாளர் பிரிவில் நிரந்தரமாக வசிப்பவராகவும் 2020.01.01 ஆம் திகதிக்கு பட்டம் பெற்று ஒரு வருடத்திற்கும் அதிக காலம் தொழிலின்றி இருப்பதாகவும் கிராமசேவகர் மற்றும் பிரதேச செயலாளர் உறுதிப்படுத்தவேண்டும்.

சான்றிதழை உறுதிப்படுத்தல்
விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து பட்டச் சான்றிதழ் அல்லது டிப்ளோமா சான்றிதழ் மற்றும் பெறுபேறு சான்றிதழின் புகைப்படப் பிரதி ஒன்று (மூலப் பிரதியுடன் ஒத்திருப்பதை சமாதான நீதவான் ஒருவர் அல்லது சட்டத்தரணி ஒருவரினால் உண்மையான பிரதி என்பதை உறுதிப்படுத்தி) அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப முடிவுத் திகதி
விண்ணப்ப முடிவுத் திகதி 2020.02.20 என அறிவிக்கப்பட்டுள்ளது

(ஏற்கனவே 2020.02.14ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அது தற்போது நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது) 

ஸ்பீட் போஸ்ட் அல்லது கூரியர் சேவை
இலங்கை தபால் திணைக்களத்தின் ஸ்பீட் போஸ்ட் கூரியர் சேவையின் ஊடாக அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

விண்ணப்பப்படிவம்
விண்ணப்பங்களை ஜனாதிபதி அலுவலகத்தின் www.presidentsoffice.gov.lk இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்ய முடியும். (பக்கத்தின் அடியிலிருந்தும் தரவிறக்கம் செய்யலாம்)

முகவரி
தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் டிப்ளோமாதாரிகளிற்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் 2020, நிறுவன முகாமைத்துவ மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவு, ஜனாதிபதி அலுவலகம், காலி முகத்திடல், கொழும்பு - 01 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்.

கடித உறையின் இடது மூலையில்
கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் பட்டதாரியாயின் “பட்டதாரி / (மாவட்டத்தின் பெயர்) என்றும் டிப்ளோமாதாரி/ (மாவட்டத்தின் பெயர்) என்றும் குறிப்பிடப்படுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் நிராகரிப்பு
குறித்த திகதிக்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தொழில் பிரிவுகள்
தெரிவு செய்யப்படுபவர்கள் கல்வி அமைச்சு (கிராமிய தோட்டப் பாடசாலைகள்), நீர்ப்பாசன திணைக்களம், கமநல சேவைகள் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், சுதேச மருத்துவ (ஆயுர்வேத) திணைக்களம், சுகாதார அமைச்சு (கிராமிய வைத்தியசாலைகள் / மருத்துவ நிலையங்கள்) நில அளவை திணைக்களம், விவசாய திணைக்களம், சிறு ஏற்றுமதி பயிர்கள் திணைக்களம், விலைமதிப்புத் திணைக்களம், குடிவரவு குடியகல்வு திணைக்களம் ஆகிய துறைகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவர்.

பயிற்சியில் ரூ. 20,000 கொடுப்பனவு
ஒரு வருட பயிற்சிக் காலத்தில் ரூபா 20,000 கொடுப்பனவு வழங்கப்படும். நியமனங்கள் மாவட்ட மட்டத்தில் வழங்கப்படும்.

5 வருடம் ஒரே மாவட்டத்தில் சேவை கட்டாயம்
முதலாவது நியமனம் வழங்கப்படும் மாவட்டத்தில் ஐந்து வருடங்கள் சேவை செய்வது கட்டாயமானதாகும். 

விண்ணப்பம் ►


Add new comment

Or log in with...