வூஹானிலுள்ள மாணவர்களை அழைத்து வர விமானம் புறப்பட்டது

Sri Lankan Left to Wuhan to Bring Back Sri Lankans

சீனாவின் வூஹான் நகரிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இலங்கையர்களை அழைத்து வருவதற்காக ஏற்பாடு செய்திருந்த விமானம் தற்போது சீனா நோக்கி புறப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான UL 1423 எனும் விமானமே இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளது.

குறித்த விமானம் நாளையதினம் (01) இலங்கையர்களை அழைத்துக்கொண்டு இலங்கை திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து குறித்த மாணவர்களை சோதனைக்குட்படுத்துவதற்காக, அவர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக தியத்தலாவ இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...