Saturday, February 1, 2020 - 9:42am
சீனாவின் வூஹான் நகரிலிருந்து இலங்கை மாணவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களைளயும் ஏற்றிக்கொண்டு பயணித்த விசேட விமானம் இன்று(01) காலை மத்தள விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இவ்வாறு வருகை தந்துள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று அவதானிக்க தியத்தலாவை இராணுவ முகாமிற்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யூ.எல்.1422 எனும் விமானம் மூலமே வூஹான் நகரிலிருந்து குறித்த மாணவர்களும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
Add new comment