உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயம்
புதிய கொரோனா வைரஸ் தொடர்பில் எழுந்துள்ள பயத்தை அடுத்து எழுந்துள்ள முகக் கவச கேள்வி காரணமாக, வர்த்தகர்கள் அதிக விலைக்கு அவற்றை விற்பது கண்டறியப்பட்டதை அடுத்து முக கவசங்களுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, மீள பயன்படுத்த முடியாத சாதாரண முக கவத்திற்கு ரூ. 15 எனவும், N95 வகை முகக் கவசத்திற்கு ரூ. 150 எனவும் உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இன்று (29) இதனை அறிவித்துள்ளது.
அதற்கமைய, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக முகக் கவசங்களை விற்போர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கு முக கவசங்களை விற்பனை செய்யும் மருந்தகங்கள் மற்றும் விற்பனை நிலையங்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை நுகர்வோர் விவகார அதிகார சபை ஆரம்பித்துள்ளது.
அதிக விலைக்கு முக கவசங்களை விற்பனை செய்யும் விற்பனை நிலையங்கள் தொடர்பில் 1977 எனும் இலக்கத்திற்கு அழைத்து தெரிவிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Add new comment