இலங்கை வந்த சீனப் பெண்ணுக்கு கொரோனா வைரஸ்

- முதல் நோயாளி கண்டுபிடிப்பு
- உடன் இருந்தவர்களையும் பரிசோதிக்கவும் நடவடிக்கை

இலங்கையில் முதல் கொரோனா வைரஸ் தொற்றுள்ளவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனை சுகாதார மேம்பாட்டுக்கு பணியகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹுபேயிலிருந்து வந்த 43 வயதான சீனப் பெண் ஒருவர் இவ்வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தேவையற்ற பயத்தை ஏற்படுத்துவதற்கான தகவல் அல்ல எனவும், விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது எனவும், சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

குறித்த பெண் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, சுகாதாரத்துறையினர் இதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

மக்கள் பீதி அடைய வேண்டாம் என தெரிவித்துள்ள பணியகம், nCoV வைரஸை அடையாளம் காண்பதற்கான வசதிகளைக் கொண்ட ஆய்வகங்களில் இலங்கையும் ஒன்றாகும் என பணியகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் IDH வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் இக்கால அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நோயாளியுடன் இருந்தவர்களை சோதனை செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார பணியகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...