ஶ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்

ஶ்ரீ.ல.சு.க. அமைப்பாளர் பதவியிலிருந்து சந்திரிக்கா நீக்கம்-Chandriak Kumaratunga Removed from the post SLFP Organizer Post

பதில் அமைப்பாளராக லசந்த அலகியவன்ன நியமனம்

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல தொகுதி அமைப்பாளர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நீக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் அரசியல் சபை இம்முடிவை எடுத்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

கட்சியின் கட்சியின் முடிவுகளுக்கு மாற்றமாக நடந்துகொண்டமை தொடர்பில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் குறித்த பதவிக்கு அத்தனகல தொகுதியின் பதில் அமைப்பாளராக லசந்த அலகியவன்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...