பசறை - மடுல்சீமை வீதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

பசறை - மடுல்சீமை வீதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து-Accident-6 Killed-Passara-Madulsima
(படங்கள் - ஹற்றன் சுழற்சி நிருபர் - ஜி.கே. கிரிஷாந்தன்)

8 பேர் உயிரிழப்பு

பசறை - மடுல்சீமை வீதியில் சென்ற இ.போ.ச. பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இன்று (06) பிற்பகல் 5.20 மணியளவில் பசறை - மடுல்சீமை வீதியில் 6ஆம் கட்டை பிரதேசத்தில் வைத்து குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பசறையிலிருந்து மடுல்சீமை நோக்கி பயணித்த இ.போ.ச. பஸ் ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன்போது, பஸ்ஸில் பயணித்த 4 ஆண்கள், 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 24 ஆண்கள் மற்றும் 16 பெண்கள் ஆகிய 40 பேர் காயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பசறை - மடுல்சீமை வீதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து-Accident-6 Killed-Passara-Madulsima

பசறை - மடுல்சீமை வீதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து-Accident-6 Killed-Passara-Madulsima

பசறை - மடுல்சீமை வீதியில் பஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து-Accident-6 Killed-Passara-Madulsima

Add new comment

Or log in with...