பதுளை வீதிகள் மூடல்; அனர்த்தத்திலிருந்து 11 பேர் தப்பினர்

பதுளை வீதிகள் மூடல்; அனர்த்தத்திலிருந்து 11 பேர் தப்பினர்-Badulla Road Closed-11 Safe Before Landslide

பதுளையின் பல்வேறு இடங்களில ஏற்பட்டுள்ள மண்சரிவு நிலை காரணமாக, இன்று (20) பிற்பகல் 5.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை பல பாதைகள் மூடப்பட்டுள்ளன.

அதற்கமைய, பதுளை, பசறை, லுணுகல, பிபிலை வரையான பாதையே இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக, பதுளை மாவட்ட உதவி பணிப்பாளர் ஏ.எம்.எல். உதய குமார தெரிவித்தார்.

பதுளை வீதிகள் மூடல்; அனர்த்தத்திலிருந்து 11 பேர் தப்பினர்-Badulla Road Closed-11 Safe Before Landslide

அத்துடன் பதுளை மாவட்டத்தின் ஏனைய வீதிகளை பயன்படுத்துவோர் அவதானமாக இருக்குமாறு சாரதிகள் மற்றும் பாதாசரிகளுக்கு அறிவுறுத்தப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, பதுளையில் ஏற்பட்ட மண்சரிவு அனர்த்தம் காரணமாக 11 பேர் தங்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதுளை, பசறை பிரதேசத்தில் வெல்கொல்ல பாடசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு வீடுகள் மண் சரிவினால் முழுமையாக சேதமமைந்துள்ளன.

பதுளை வீதிகள் மூடல்; அனர்த்தத்திலிருந்து 11 பேர் தப்பினர்-Badulla Road Closed-11 Safe Before Landslide

மண் சரிவு ஏற்பட நொடி பொழுதிற்கு முன்னர் அந்த வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 11 பேர் வெளியேற்றப்பட்டமையினால் உயிர் தப்பியுள்ளனர்.

வீடுகள் இரண்டும் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய பிரதேச செயலகத்தின் கண்கானிப்பின் கீழ் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பதுளை வீதிகள் மூடல்; அனர்த்தத்திலிருந்து 11 பேர் தப்பினர்-Badulla Road Closed-11 Safe Before Landslide

அந்த குடும்பத்தில் அங்கிருந்து வெளியேறி நொடிப்பொழுதுகளில் பாரிய மண் சரிவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டு வீடுகளும் முழுமையான சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு பிரதேச செயலகம் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(ஹற்றன் சுழற்சி  நிருபர் - கே. கிஷாந்தன்)

Add new comment

Or log in with...