அமைச்சுகளுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

அமைச்சர்களுக்கான விடயங்கள் அடங்கிய வர்த்தமானி வெளியீடு

அமைச்சர்களும் அவர்களுக்கான விடயங்கள் அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு நேற்று (10) வெளியிடப்பட்டது.

64 பக்கங்களைக் கொண்ட குறித்த வர்த்தமானியில் 29 அமைச்சுகளுக்கான விடயதானங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் 43-1 வது பிரிவு மற்றும் 46-1 வது பிரிவு ஆகியவற்றின் படி, அமைச்சர்களுக்கு உள்ளடங்கும் விடயங்கள், செயல்பாடுகள், திணைக்களங்கள், நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்டரீதியான அமைப்புகள் ஆகியன இவ்வாறு பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, முப்படைகள், பொலிஸ் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்களை பதிவு செய்யும் திணைக்களம், இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவுனம் உள்ளிட்ட 31 நிறுவனங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார மற்றும் கொள்கைகள் அபிவிருத்தி  அமைச்சின் கீழ், திறைசேரி, மத்திய வங்கி, பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் அனைத்து அரச வங்கிகள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள் உட்பட 48 நிறுவனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் அனைத்து மத விவகாரத் திணைக்களங்கள், தொல்பொருள் மற்றும் கலாச்சார அலுவல் திணைக்களங்கள் ஆகியன வர்த்தமானிப்படுத்தப்பட்டுள்ளன.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவை திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சகத்தின் கீழ் வர்த்தமானி செய்யப்பட்டுள்ளன.

அரச தகவல் திணைக்களம், அரசாங்க அச்சுத் திணைக்களம் மற்றும் அரச ஊடக நிறுவனங்கள் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.


Add new comment

Or log in with...