சம்மாந்துறை வீட்டில் ISIS உபகரணங்கள் மீட்பு

சம்மாந்துறை வீட்டில் ISIS உபகரணங்கள் மீட்பு-ISIS Uniform Banner Explosive Found-Sammanthurai

சம்மாந்துறையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

அரசாங்க புலனாய்வு சேவை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, குற்றவியல் விசாரணை திணைக்களம் மற்றும் அம்பாறை பொலிஸ் பிரிவுக்கு அறிவிக்கப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு பொருட்களை கைப்பற்றியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இன்று (26) பிற்பகல் மேற்கொண்ட குறித்த தேடுதல் நடவடிக்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கையின் பல்வேறு இடங்களில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட தற்கொலை குண்டுதாரிகள் வெளியிட்டதாக தெரிவிக்கப்படும் வீடியோ காட்சியில் காணப்படும், ISIS சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் அவர்கள் அணிந்திருந்த கறுப்பு உடைகள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன் 150 ஜெலிக்னைற் குச்சிகள், சுமார் ஒரு இலட்சம் சன்னங்கள் (சிறிய இரும்பு பந்துகள்), ட்ரோன் கமெரா, லெப்டொப் ஒன்று மற்றும் வேன் ஒன்று  ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக, ருவன் குணசேகர தெரிவித்தார். 

(எமது SMS செய்தி சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளதால், REG THINAKARAN -> 77000 வழியாக பதிவு செய்துள்ளோர் தொடர்ந்தும் எம்முடன் இணைந்திருங்கள்; சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றன)


Add new comment

Or log in with...