சட்டமாணி நுழைவு தெரிவுக்கான பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்படும் குறித்த பரீட்சையின் பெறுபேறுகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பரீட்சையின் பெறுபேறுகளை திறந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரீட்சை கடந்த மே 20 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது,
கடந்த மார்ச் மாதம் இடம்பெறவிருந்த இப்பரீட்சை, பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுவந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் காரணமாக மே மாதம் வரை ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெறுபேறுகளை பார்வையிட:
www.ou.ac.lk/home/index.php/exam-results
Add new comment