தொழிற்சங்க நடவடிக்கையே காரணம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் பெப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரையிலான காலப்பகுதியில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து பரீட்சைகள் மற்றும் தெரிவுப்பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.
பல்கலைக்கழகங்களில் இடம்பெற்றுவரும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக குறித்த பரீட்சைகள் யாவும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அறிவித்துள்ளார்.
அந்த வகையில் மார்ச் 04 ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவிருந்த சட்டமாணி (LLB) மற்றும் முகாமைத்துவக் கற்கைகள்மாணி (BMS) கற்கைகளுக்கான தெரிவுப்பரீட்சைகள் நடைபெறும் திருத்தப்பட்ட திகதி பத்திரிகைகள் மூலமும் பல்கலைக்கழக இணையத்தளம் (www.ou.ac.lk) மூலமும் பின்னர் அறியத்தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add new comment