பாராளுமன்றம் கலைப்பு; அதி விசேட வர்த்தமானி வெளியீடு

பாராளுமன்றம் கலைப்பு; அதி விசேட வர்த்தமானி வெளியீடு-Parliament Dissolved From Midnight Today

பாராளுமன்றத் தேர்தல் ஜனவரி 05

இன்று நள்ளிரவு (10) முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, அது தொடர்பான 2096/70 எனும் அதி விசேட வர்த்தமானி, அரசாங்க அச்சக திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதற்கமைய, பாராளுமன்றம் மீண்டும் எதிர்வரும் 2019 ஜனவரி 17 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவித்தலுக்கு அமைய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஜனவரி 05 ஆம் திகதி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கலுக்கான கால எல்லை எதிர்வரும் நவம்பர் 19 - 26 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசாங்க அச்சக திணைக்களம், ஜனாதிபதி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி (2096/61) அறிவித்தலொன்றும் வௌியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Parliament Dissolved Extraordinary Gazette:

-> Tamil
-> Sinhala
-> English

PDF File: 

Add new comment

Or log in with...