மின்னல் தாக்கி 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி

மின்னல் தாக்கி 5 பெண்கள் வைத்தியசாலையில் அனுமதி-Lightning-5 Women-Plantation Workers Injured

மின்னல் தாக்கம் காரணமாக, காயமடைந்த பெண்கள் ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை, மடுல்சீமை தோட்டத்தில், தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண்கள் ஐவரே, இவ்வாறு மின்னல் தாக்கியதில் காயமடைந்து பொகவந்தலாவை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காயமடைந்தோர் பொகவந்தலாவை, மொராவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த, 23, 32, 33, 36, 42 வயதுடையவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


Add new comment

Or log in with...